UPDATED : டிச 18, 2023 12:00 AM
ADDED : டிச 19, 2023 09:35 AM
சென்னை:
உள்கட்டமைப்பு வசதி இல்லாத, 70 கல்லுாரிகள் விளக்கம் அளிக்க, அண்ணா பல்கலை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 442 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், நடப்பு கல்வி ஆண்டில், 2.19 லட்சம் இடங்களில், மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இவற்றில், 44 கல்லுாரிகளில், 10க்கும் குறைவாகவும்; 26 கல்லுாரிகளில், சில பாடப்பிரிவுகளில் மாணவர்களே சேராததும் தெரியவந்துள்ளது.இந்த கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு வசதி குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கல்லுாரிகளுக்கு, உள் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டுமென்ற நிபந்தனையுடன், அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்நிலையில், 70 கல்லுாரிகளிலும் உள் கட்டமைப்பு வசதிகள் சரி செய்யப்பட்டதா; இல்லாவிட்டால் எப்போது சரி செய்யப்படும் என, விளக்கம் தர, அண்ணா பல்கலை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.மாணவர் சேர்க்கை குறைந்த கல்லுாரிகளில், அண்ணா பல்கலை பேராசிரியர் குழு வாயிலாக, நேரடி ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக, பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
