தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/19 பள்ளி கட்டடங்கள் பயன்படுத்த தகுதியில்லை; மாநகராட்சி அறிக்கையில் தகவல்

19 பள்ளி கட்டடங்கள் பயன்படுத்த தகுதியில்லை; மாநகராட்சி அறிக்கையில் தகவல்

19 பள்ளி கட்டடங்கள் பயன்படுத்த தகுதியில்லை; மாநகராட்சி அறிக்கையில் தகவல்


UPDATED : டிச 18, 2023 12:00 AM

ADDED : டிச 19, 2023 09:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2023 12:00 AM ADDED : டிச 19, 2023 09:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
பெங்களூரில் நர்சரி பள்ளி இடிந்து விழுந்த சம்பவத்துக்கு பின் எச்சரிக்கை அடைந்துள்ள மாநகராட்சி, தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளி, மருத்துவமனை கட்டடங்களின் திறனை ஆய்வு செய்தது. 19 பள்ளி கட்டடம், மூன்று மருத்துவமனை கட்டடம் பயன்படுத்த தகுதியானது அல்ல என்பது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.பெங்களூரு, சிவாஜி நகரில் மாநகராட்சி சார்ந்த நர்சரி பள்ளி இயங்குகிறது. இது மிகவும் பழமையான கட்டடத்தில் உள்ளது. கட்டடத்தை சீரமைப்பதில் அதிகாரிகள், ஆர்வம் காண்பிக்கவில்லை. பள்ளியில் 80 சிறார்கள் கல்வி பயில்கின்றனர். நவம்பர் 27ல், அதிகாலை 3:00 மணியளவில் பள்ளி இடிந்து விழுந்தது.சிறார்கள் வருவதற்கு முன்பே, பள்ளி இடிந்து விழுந்ததால், அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை தீவிரமாக கருதிய பெங்களூரு மாநகராட்சி, தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளி, மருத்துவமனை கட்டடங்களின் திறனை தெரிந்து கொள்ள முடிவு செய்தது. இது தொடர்பாக, ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, பொறியாளர்களுக்கு உத்தரவிட்டது.இதன்படி ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளனர். மாநகராட்சியின் 73 பள்ளி, கல்லுாரிகளின் கட்டடங்கள் பாதுகாப்பாக உள்ளன. 67 பள்ளி, கல்லுாரி கட்டடங்களை புதுப்பிக்க வேண்டியுள்ளது. 19 பள்ளி கட்டடங்கள் பயன்படுத்த தகுதியாக இல்லை. இவற்றை இடித்துவிட்டு, புதிதாக கட்ட வேண்டும்.ஆஸ்டின் டவுனின், மாயாபஜார் குடிசைப் பகுதியில் உள்ள நர்சரி, தொடக்க, உயர்நிலைப் பள்ளி கட்டடம், ஹலசூரின், கேம்பிரிட்ஜ் சாலையின் நர்சரி, அசோக் நகரின், கமிஷனரேட் சாலையின் நர்சரி, பாப்பையா கார்டனின் நர்சரி, வசந்த நகர்.பிராட்வே சாலையின் நர்சரி பள்ளி கட்டடங்கள், பாரதி நகரின் நர்சரி, ஸ்லேட்டர் டவுன் சாலையின் பள்ளி கட்டடம், நாராயண பிள்ளை சாலையின் நர்சரி, சிவன் ஷெட்டி கார்டனில் நர்சரிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டியுள்ளது என, அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.இத்தகைய பள்ளிகளில், மாணவர்கள் பயில்வது நல்லதல்ல. கட்டடத்தை சீரமைக்க வேண்டும். அதே போன்று மருத்துவமனைகளின் கட்டடம், பயன்படுத்த தகுதியானது அல்ல என, கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us