தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவரின் காதை திருகியதால் காயம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

மாணவரின் காதை திருகியதால் காயம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

மாணவரின் காதை திருகியதால் காயம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை


UPDATED : டிச 19, 2023 12:00 AM

ADDED : டிச 19, 2023 10:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 19, 2023 12:00 AM ADDED : டிச 19, 2023 10:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
திருக்கனுார் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு மாணவர், காதில் ரத்தம் சொட்ட பேசும் வீடியோ வைரலாகியது.அந்த மாணவர் வகுப்பறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சக மாணவி மீது மோதியது தொடர்பாக, தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், தலைமை ஆசிரியர், தன்னை காதில் திருகியதால் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியதாக கூறப்பட்டிருந்தது.இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், அதே தலைமை ஆசிரியர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், பள்ளி மாணவர் ஒருவருக்கு கையில் சூடு வைத்து ரத்த காயம் ஏற்படுத்தியதாகவும், இதுபோன்று தொடர்ந்து இந்த ஆசிரியர் மாணவர்களை காயம் ஏற்படும் வகையில் தண்டித்து வருவதாக கல்வித்துறையிடம் புகார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் தொடர்பான கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையை துவங்கியுள்ளனர். மேலும், மாணவரின் வீடியோ குறித்து குழந்தை நல அதிகாரிகளும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us