UPDATED : டிச 20, 2023 12:00 AM
ADDED : டிச 20, 2023 09:53 AM
விருதுநகர்:
கூட்டுறவு சங்கங்களில் உள்ள 1044 காலிப் பணியிடங்கள் தேர்வுக்கான அனுமதி நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் செய்திக்குறிப்பு:
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 1044 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நவ. 10ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதற்கான எழுத்துத் தேர்வு டிச. 24ல் விருதுநகர் மதுரை ரோட்டில் உள்ள கே.வி.எஸ்., பள்ளியில் நடத்தப்பட உள்ளது. இத்தேர்விற்கான அனுமதி நுழைவு சீட்டை டிச. 18 முதல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் www.vnrdrb.net என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கூடுதல் விபரங்களுக்கு 04562 252680 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்றார்.
