புதுச்சேரி வேளாண் கல்லுாரிக்கு சிறந்த நிறுவனத்திற்கான விருது
புதுச்சேரி வேளாண் கல்லுாரிக்கு சிறந்த நிறுவனத்திற்கான விருது
UPDATED : டிச 20, 2023 12:00 AM
ADDED : டிச 20, 2023 09:59 AM
புதுச்சேரி:
புதுச்சேரி வேளாண் அறிவியல் கல்லுாரிக்கு சிறந்த பட்டயக் கல்வி நிறுவனத்திற்கான விருது வழங்கப்பட்டது.கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வேளாண் அறிவியல் தமிழ் இயக்கம், டில்லி உயர் கூட்டணியின்9வது வேளாண் அறிவியல் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது.இதில், சிறந்த பட்டய கல்லுாரிக்கான விருது, தவளகுப்பம், புதுச்சேரி வேளாண் அறிவியல் கல்லுாரிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதா லட்சுமி,தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தர் பெலிக்ஸ், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக துணை வேந்தர் செல்வகுமார், வேளாண் அறிவியல் தமிழ் இயக்க நிறுவனர் முத்தமிழ் செல்வன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்குனர் ஜெயக்குமார் ஆகியோர் கல்லுாரியின் தாளாளர் அக்ரி கணேஷிடம் வழங்கினர்.கல்லுாரி முதல்வர் சுபஸ்ரீ உடனிருந்தார்.
