தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விடுதிக்கு செல்ல ரோடு வசதி இல்லாததால் மாணவிகள் தவிப்பு

விடுதிக்கு செல்ல ரோடு வசதி இல்லாததால் மாணவிகள் தவிப்பு

விடுதிக்கு செல்ல ரோடு வசதி இல்லாததால் மாணவிகள் தவிப்பு


UPDATED : டிச 21, 2023 12:00 AM

ADDED : டிச 21, 2023 10:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 21, 2023 12:00 AM ADDED : டிச 21, 2023 10:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி:
ஆதிதிராவிடர் மாணவியர் விடுதிக்கு ரோடு வசதி கிடையாது. மழை நேரங்களில் சேரும் சகதியுமாக இருப்பதால் மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவிகள் தங்கி படிக்க 15 ஆண்டுகளுக்கு முன் நந்திக்குண்டு ரோட்டில் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி கட்டப்பட்டது. தற்போது 86 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். விடுதிக்குச் செல்ல ரோடு வசதி கிடையாது.பிரதான ஓடையை கடந்து செல்ல வேண்டும். மேலும் வயல்வெளிக்குள் செல்ல வேண்டி இருப்பதால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. மாணவிகள் அச்சத்தில் நடந்து செல்கின்றனர்.தற்போது கனமழை பெய்ததால் ஓடையில் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. வயல்வெளிக்குள் நடந்து செல்ல முடியவில்லை. சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவிகள் சேரும் சகதிக்குள் நடந்து செல்ல வேண்டி இருப்பதால் தவித்து வருகின்றனர்.ரோடு வசதி கேட்டு பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவிகளின் நலலை கருத்தில் கொண்டு விரைவில் ரோடு வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us