தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தற்காப்பு கலை பயிற்சியை விரிவுபடுத்துங்க! அரசுக்கு பெற்றோர் வலியுறுத்தல்

தற்காப்பு கலை பயிற்சியை விரிவுபடுத்துங்க! அரசுக்கு பெற்றோர் வலியுறுத்தல்

தற்காப்பு கலை பயிற்சியை விரிவுபடுத்துங்க! அரசுக்கு பெற்றோர் வலியுறுத்தல்


UPDATED : டிச 21, 2023 12:00 AM

ADDED : டிச 21, 2023 10:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 21, 2023 12:00 AM ADDED : டிச 21, 2023 10:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
மாணவர்களுக்கு வழங்கப்படும் தற்காப்பு கலை பயிற்சியை, விரிவுபடுத்தி செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவியருக்கு, தற்காப்பு பயிற்சி அளிக்கும் வகையில் அரசின் சார்பில், கராத்தே வகுப்புகள் நடத்தப்படுகிறது. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 6, 7, 8 படிக்கும் மாணவியருக்கு, பயிற்சியாளர் ஒருவரை நியமித்து, மூன்று மாதங்கள் கராத்தே வகுப்பு நடத்தப்படுகிறது.ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம், வாரத்தில் இரண்டு நாட்களும், மாதத்தில் 8 வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது. கல்வியாண்டின் இறுதியில், வகுப்புகள் மூன்று மாதம் கணக்கில் நடத்தப்படுகிறது.மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தினால், அவர்களின் வாழ்க்கை முழுவதுமே, இந்த பயிற்சி உதவும் என பெற்றோர் வலியுறுத்துகின்றனர். இன்றைய சூழலில், பெண் குழந்தைகள் வெளியில் சென்று வீட்டிற்கு திரும்புவதற்குள், அவர்களுக்கான பாதுகாப்பு என்பது மிகவும் குறைவாக உள்ளது.அத்தகைய நிலையில் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு, அவர்களுக்கு மனவலிமையுடன் உடல் வலிமையும் அவசியமாகிறது. மேலும், தற்காப்பு கலை கற்றுக்கொள்வதால், மாணவர்களின் கவனச்சிதறலும் குறைகிறது. மூன்று மாதங்களில் அடிப்படையான அசைவுகளை மட்டுமே, மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும்.இதனால் பயிற்சியில் ஆர்வமுள்ள மாணவர்கள், தொடர்ந்து கற்றுக்கொள்வதற்கு தனியார் மையங்களுக்குச்செல்ல வேண்டியுள்ளது. அடுத்த முறை பயிற்சிகளுக்கு, ஒரு கல்வியாண்டு வரை காத்திருக்க வேண்டி வருவதால், மாணவர்கள் அவர்கள் கற்றுக்கொண்டதையும் மறக்கின்றனர். இந்த நிலையால், பயிற்சி அளித்தும் மாணவர்களுக்கு பயனில்லாமல் போகிறது.மூன்று மாதமாக இருக்கும் பயிற்சி வகுப்புகளை கூடுதலாக்குவதற்கும், ஆறு முதல் பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும், இந்த பயிற்சி சென்றடையும் வகையில் அரசு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.இதனால், அரசுப்பள்ளிகளின் மீது பெற்றோருக்கு கூடுதல் ஆர்வம் ஏற்படுகிறது. மாணவர்களுக்கும், இதுபோன்ற தற்காப்பு பயிற்சி அவசியமாகவே உள்ளது. இருபாலரும் பயன்பெறும் வகையில், பயிற்சி வகுப்புகளை பொதுவாக மாற்றுவதற்கும், திட்டத்தை விரிவுபடுத்தவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us