UPDATED : டிச 21, 2023 12:00 AM
ADDED : டிச 21, 2023 03:17 PM
ஈரோடு:
தமிழ் எழுத்தாளர் தேவிபாரதியின் நீர்வழிப் படூஉம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.அவர் அளித்த பேட்டி:
நான் கவிதை, அரசியல் கட்டுரை, சிறுகதை, நாவல்களை, கடந்த 40 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். காலச்சுவடு பதிப்பகத்தில், பத்தாண்டுகள் ஆசிரியராகவும் பணியாற்றினேன். கரூர், வெள்ளக்கோவில் பகுதிகளில் வாழும் நாவிதர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. அமராவதி அருகில் உள்ள உடையாம்பாளையம் எனும் கிராமத்தில், காருமாமா என்பவர் சார்ந்த வாழ்வியலாக, நீர்வழிப் படூஉம் எனும் நாவலை எழுதினேன்.இதற்கான கரு, கடந்த பத்தாண்டுகளாக மனதில் இருந்தது. இதை பலவாறு எழுதி, அதை நிறைவு செய்ய, எட்டு மாதங்கள் ஆயின. நாவல், 2021ல், நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்த நாவலுக்காக, சாகித்ய அகாடமி&' விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. இதில், மிகைப்படுத்தாத, எதார்த்த வாழ்க்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள் தாங்கள் சார்ந்த வாழ்வியலை எழுதினால், அதில் உண்மை மிளிரும். என், நொய்யல், நட்ராஜ் மஹாராஜ் உள்ளிட்ட நாவல்கள் அப்படிப்பட்டவை தான். இவ்வாறு கூறினார்.
