UPDATED : டிச 21, 2023 12:00 AM
ADDED : டிச 21, 2023 03:24 PM
மதிப்பெண் சான்றிதழ்களின் அசல் பிரதி, மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல், இடம் பெயர்வு சான்றிதழ் போன்றவை, இதுவரை தபால் வழி விண்ணப்பங்களை பெற்று வழங்கப்பட்டன. இனி, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியில் விண்ணப்பித்து, சான்றிதழ்களை பெறலாம். ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், அதன் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, விண்ணப்பத்தில் குறிப்பிட்ட இ- மெயில் முகவரிக்கு அனுப்பப்படும்.தபால் வழி விண்ணப்பம் துறை அலுவலகத்தை அடைய காலதாமதம் ஆவதுடன், அதன் விபரங்களை பயனாளர் அறிய முடியாத நிலை இருந்தது. ஆன்லைன் வழி விண்ணப்பத்தில் இந்த நிலை ஏற்படாது. அலுவலகத்துக்கு விண்ணப்பம் வந்து சேர்வதில் தாமதம் இருக்காது. தேவைப்படும் அம்சங்களை பூர்த்தி செய்யாமல், விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியாது. விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ள வசதி உள்ளது. உரிய காலத்தில் சான்றிதழ்கள் வழங்கப்படும். வீண் அலைச்சல் தவிர்க்கப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குனர், சேதுராமவர்மா தெரிவித்துள்ளார்.
