தகுதி சான்று புதுப்பிக்காத 4 பள்ளி வாகனங்கள் பறிமுதல்
தகுதி சான்று புதுப்பிக்காத 4 பள்ளி வாகனங்கள் பறிமுதல்
UPDATED : டிச 21, 2023 12:00 AM
ADDED : டிச 21, 2023 05:19 PM
அ நிறம் | அளவு
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவில் அருகே தகுதி சான்று புதுப்பிக்காமல் ஓடிய 4 பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.காட்டுமன்னார்கோவில் அடுத்த வீரானந்தபுரம் அருகே உள்ள அக் ஷரா தனியார் பள்ளி வாகனம் சமீபத்தில் விபத்துக்குள்ளானது. இந்த வாகனத்தை, மோட்டார் வாகன அதிகாரிகள் ஆய்வு செய்த போது சரியான அனுமதி இல்லாமல் இயங்கியது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து, சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா, அதே பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார்.அதில் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாமலும் அனுமதி பெறாமல் இயக்கப்பட்ட 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
