தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறுதானிய சாகுபடி குறித்து வேளாண் பல்கலையில் தேசிய கருத்தரங்கு

சிறுதானிய சாகுபடி குறித்து வேளாண் பல்கலையில் தேசிய கருத்தரங்கு

சிறுதானிய சாகுபடி குறித்து வேளாண் பல்கலையில் தேசிய கருத்தரங்கு


UPDATED : டிச 22, 2023 12:00 AM

ADDED : டிச 22, 2023 10:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2023 12:00 AM ADDED : டிச 22, 2023 10:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பாரதியார் பல்கலையின் கீழ், தாவரவியல் மற்றும் உயிர் வேதியியல் துறை சார்பில், சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் மூலிகை தாவரங்களின் பாதுகாப்பு என்ற தலைப்பில் தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு நேற்று பல்கலை அரங்கில் துவங்கியது.வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி கருத்தரங்கை துவக்கிவைத்து பேசியதாவது:
சிறுதானியங்களை உணவாக கொண்ட நம் முன்னோர் ஆரோக்கியமாக நீண்டகாலம் வாழ்ந்தனர். தற்போது, கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் உள்ளன .நம் அன்றாட உணவு பழக்கவழக்கங்களில், சிறுதானிய உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். சிறுதானியங்கள் சாகுபடியை பொறுத்தவரையில், வறட்சியை, அதிக வெப்பநிலை போன்ற காலநிலை சவால்களை ஏற்று வளரும் தன்மை கொண்டது. குறிப்பாக, சாகுபடிக்கு நீர் மிகவும் குறைவாக தேவைப்படும்.விவசாயிகள் அதிகளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்ய அரசும், வேளாண் பல்கலை தரப்பிலும் ஊக்குவிக்கப்படுகிறது. உலகளவில், மொத்த சிறுதானிய உற்பத்தியில், 15 சதவீத பங்களிப்பு இந்தியாவை சார்ந்தது. தமிழகத்தில், 11.6 மில்லியன் டன் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.இவ்வாறு, அவர் பேசினார்.சிறுதானியங்களில் மதிப்பு கூட்டிய உணவுகள் சார்ந்த தொழில்முனைவோர் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. பல்கலை பதிவாளர் ( பொறுப்பு ) முருகவேல், தாவரவியல் துறைத்தலைவர் பரிமேழலகன், இணை பேராசிரியர் வசந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us