தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கைத்தறி வடிவமைப்பாளர் விருது 31 வரை விண்ணப்பம் அனுப்பலாம்

கைத்தறி வடிவமைப்பாளர் விருது 31 வரை விண்ணப்பம் அனுப்பலாம்

கைத்தறி வடிவமைப்பாளர் விருது 31 வரை விண்ணப்பம் அனுப்பலாம்


UPDATED : டிச 23, 2023 12:00 AM

ADDED : டிச 23, 2023 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 23, 2023 12:00 AM ADDED : டிச 23, 2023 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
மாநில அளவில் சிறந்த வடிவமைப்பாளர் விருது வழங்க, இளம் கைத்தறி வடிவமைப்பாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இளம் தலைமுறையினர் இடையே கைத்தறி ரகத்தின் மீது பிணைப்பை ஏற்படுத்தவும், அவ்வப்போது மாறி வரும் நவீன சந்தை தேவை அறிந்து, புதிய வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும், கைத்தறி ரகங்களில் புதுமையை புகுத்தி, விற்பனையை அதிகரிக்க, மாநில அளவில் கைத்தறி வடிவமைப்பாளர்களிடம் இருந்து சிறந்த வடிவமைப்புகள் பெறப்பட்டு, போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், வடிவமைப்பு நிறுவனங்கள், ஜவுளி தொழில்நுட்ப கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு, இப்போட்டி நடத்தப்படுகிறது. பரிசு வழங்கப்படும்.முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். போட்டித்தேர்வில் பங்கேற்று, மாநில அளவிலான சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கு தகுதியானவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.விபரங்களுக்கு, www.loomworld.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம். வடிவமைப்புகளை வரும், 31 வரை, கோவையில் உள்ள கைத்தறி துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு, 78455 74437, 94876 16327 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us