UPDATED : டிச 23, 2023 12:00 AM
ADDED : டிச 23, 2023 11:02 AM
கோவை:
வேளாண் பல்கலை தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் மையத்தின் கீழ் செயல்படும், இ- யுவா மையத்தின் சார்பில், வேளாண் மாணவர்களின் தொழில்முனைவோர் திறனை வெளிகொணரும் வகையில், அக்ரி பிட்ச் போட்டி பல்கலை வளாகத்தில் நடந்தது.பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த, 30 மாணவர்கள் புதிய வேளாண் தொழில் சார்ந்த யோசனைகள், திட்டங்களை காட்சிப்படுத்தி விளக்கம் அளித்தனர். 12 குழுக்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. அதில், மூன்று சிறந்த யோசனை மற்றும் கண்டுபிடிப்பு தேர்வு செய்யப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதில், மதுரை வேளாண் கல்லுாரி ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் அணி முதல் பரிசும், கோவை வேளாண் கல்லுாரி மாணவர்கள் குழு இரண்டு, மூன்றாம் பரிசினையும் தட்டிச்சென்றனர்.துணைவேந்தர் கீதாலட்சுமி, பல்கலை இயக்குனர் செந்தில், தாவர தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் கோகிலாதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
