கட்டணமின்றி கல்லூரி சான்றிதழ் நகல் பெறலாம்: உயர்கல்வித்துறை
கட்டணமின்றி கல்லூரி சான்றிதழ் நகல் பெறலாம்: உயர்கல்வித்துறை
UPDATED : டிச 23, 2023 12:00 AM
ADDED : டிச 23, 2023 05:56 PM
சென்னை:
மழையால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் கட்டணமின்றி கல்லூரி சான்றிதழ் நகல் பெறலாம் பெறலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.இது உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
கனமழை பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மாணவ, மாணவிகள் கட்டணமின்றி சான்றிதழ் நகல்களை பெறலாம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் www. mycertificates.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து நகலை பெறலாம்.இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுபெற, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
