தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/27வது தேசிய புத்தகக் கண்காட்சி புதுச்சேரியில் துவங்கியது

27வது தேசிய புத்தகக் கண்காட்சி புதுச்சேரியில் துவங்கியது

27வது தேசிய புத்தகக் கண்காட்சி புதுச்சேரியில் துவங்கியது


UPDATED : டிச 24, 2023 12:00 AM

ADDED : டிச 24, 2023 05:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2023 12:00 AM ADDED : டிச 24, 2023 05:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரியில் 27-வது தேசிய புத்தகக் கண்காட்சி துவங்கியது.புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கம் சார்பில் 27-வது தேசிய புத்தகக் கண்காட்சி வேல்சொக்கநாதன் திருமண நிலையத்தில் துவங்கியது. முதல்வர் ரங்கசாமி கண்காட்சியைத் திறந்து வைத்து, 15 புதிய நுால்களை வெளியிட்டார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கினார். செல்வகணபதி எம்.பி., ஜான்குமார் எம்.எல்.ஏ., புத்தக கண்காட்சி குழு தலைவர் முத்து, சிறப்பு தலைவர் பாஞ்ராமலிங்கம், காப்பாளர் இசைக்கலைவன், செயலாளர் முருகையன் கலந்து கொண்டனர்.கண்காட்சியில் இரண்டாம் நாளான இன்று மாலை 6 மணிக்கு அறிவு அற்றம் காக்கும் கருவி&' என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கின்றது. வரும் 31ம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணிவரை புத்தக கண்காட்சி நடக்கின்றது. அனுமதி இலவசம்.கண்காட்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 100 புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அரங்குகள் அமைத்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் 1000 ரூபாய்க்கு புத்தகம் வாங்குவோருக்கு புத்தக நட்சத்திரம் சான்றிதழும், 10 ஆயிரத்திற்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு புத்தக சிறந்த நட்சத்திரம் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us