தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த பிராமணர் சங்கம் வலியுறுத்தல்

10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த பிராமணர் சங்கம் வலியுறுத்தல்

10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த பிராமணர் சங்கம் வலியுறுத்தல்


UPDATED : டிச 24, 2023 12:00 AM

ADDED : டிச 24, 2023 09:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2023 12:00 AM ADDED : டிச 24, 2023 09:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 14வது ஆண்டு மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் கோவை கணேசன் தலைமை வகித்து சங்க கொடியை ஏற்றி வைத்தார்.ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன், மூத்த ஆலோசகர் அருண் ராமதாஸ், அமைப்பு செயலாளர் சேகர் முன்னிலை வகித்தனர். ஆண்டு அறிக்கையை பொதுச் செயலர் ஆடிட்டர் சங்கர ராமநாதன், நிதிநிலை அறிக்கையை பொருளாளர் திருவெற்றியூர் ஜெயராமன் சமர்ப்பித்தனர்.சாதனை விருதுகள்பல துறைகளில் சாதனை படைத்து சமுதாயத்துக்கு பெருமை சேர்த்த கோழிகுத்தி விஜயகுமார், அபிராமி திருமண மண்டப உரிமையாளர் ராமமூர்த்தி, நன்னிலம் ரவிச்சந்திரன், தொழிலதிபர் சுதாகரன், தேசிய மேல்நிலைப் பள்ளி ஓய்வு ஆசிரியர் ராமமூர்த்தி, மாயூரநாதர் கோயில் சுந்தர குருக்கள் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட கிளைகள், தனிநபர்கள், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.10 சதவீத இடஒதுக்கீடு
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
*மத்திய அரசால் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு சுப்ரீம் கோர்ட்டால் உறுதி செய்யப்பட்ட எந்த இடஒதுக்கீட்டிலும் வராத முற்படுத்தப்பட்ட வகுப்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டை தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்த முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்படுகிறது.*பொருளாதார ரீதியாக பின்தங்கிய நலிந்த பிராமண சமூகத்தினரின் முன்னேற்றத்துக்கு உதவி செய்ய ஒரு தனி நலவாரியம் அமைக்க, தமிழக அரசிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.*டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் மற்ற சமூகத்தினருக்கு கொடுக்கப்பட்டுள்ள வயது உச்சவரம்பு சலுகை போல் முற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வயது உச்சவரம்பை 35 ஆக உயர்த்த வேண்டும்.இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us