UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 10:06 PM
சென்னை:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு, வரும், 27 முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மார்ச், ஏப்ரலில் பொதுத் தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வு எழுத விருப்பமுள்ள தனி தேர்வர்கள், வரும், 27ம் தேதியில் இருந்து, ஜன.,10ம் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும்.அனைத்து மாவட்டங்களிலும், அரசு தேர்வு இயக்குனரகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேணடும். மேற்கண்ட தேதியில் விண்ணப்பிக்க இயலாதவர்கள், தத்கல் சிறப்பு திட்டத்தில், கூடுதல் கட்டணம் செலுத்தி, ஜன.,11 முதல், 12க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களை, www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
