மத்திய அரசு விருது பெற்ற ஊராட்சி துணைத் தலைவருக்கு பாராட்டு
மத்திய அரசு விருது பெற்ற ஊராட்சி துணைத் தலைவருக்கு பாராட்டு
UPDATED : டிச 26, 2023 12:00 AM
ADDED : டிச 26, 2023 10:30 AM
பெருநாழி:
பெருநாழி அருகே பொந்தம்புளி ஊராட்சியில் துணைத்தலைவராக ஆறுமுகம் 51, செயல்பட்டு வருகிறார்.நீர் பாதுகாப்பு முயற்சிகளை ஊக்குவிப்பதிலும் நீர் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்துவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் செயல்படுவதற்கு மத்திய நீர் வளத்துறையின் விருது வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் புதுடில்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல துறை உயர் அதிகாரிகள், தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள் என 33 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொந்தம்புளி ஊராட்சி துணைத் தலைவர் ஆறுமுகம் விருது பெற்றார்.ஜல்சக்தி அமைச்சகம், ஐக்கிய நாடுகளின் திட்ட அலுவலகம், தேசிய ஜல் ஜீவன் மிஷின் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பொந்தம்புளி ஊராட்சி சார்பில் துணைத் தலைவருக்கு பாராட்டு விழா நடந்தது.
