UPDATED : டிச 27, 2023 12:00 AM
ADDED : டிச 27, 2023 10:27 AM
விருதுநகர்:
மாணவர்கள் மத்தியில் ஒழுக்க விதிமீறலுக்கான கண்காணிப்பை தீவிரப்படுத்த விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் 278 ஒழுக்க கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.மாவட்டத்தில் கடந்த மாதம் திருத்தங்கலில் பள்ளியில் புகுந்து ஆசிரியை மாணவர்கள் இருவர் வெட்டினர். இந்த சம்பவத்தை அடுத்து பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி ஒழுக்க கமிட்டி அமைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி அரசு, உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 278 ஒழுக்க கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கமிட்டிகளின் பணி மாணவர்களை நல் வழிப்படுத்துவதும், பள்ளியில் ஆசிரியர், மாணவர் விரோத போக்கு ஏற்படாதவாறு தடுப்பதும், இடைநிற்றலை குறைப்பதும் தான்.மாவட்டத்தின் பல பகுதிகளில் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஜாதி ரீதியான மோதல் நிலவுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. பள்ளி பருவத்திலேயே இது போன்ற மோதலை தடுப்பது ஒழுக்க கமிட்டிகளின் கடமை ஆகும். இந்த கமிட்டியை அமைத்து விட்டார்களே என பெயருக்கு செயல்படாமல் இருப்பதை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.மாதம் தோறும் கமிட்டி பொறுப்பாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி மாணவர்கள் மத்தியில் அதிகம் எழும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும். அதை கலெக்டரிடம் பரிந்துரைத்து மாவட்ட அளவில் தீர்வு காண வேண்டும். மாணவர்களை சிறுவயதில் இருந்தே நல் வழிப்படுத்த துவக்கப்பள்ளிகளில் இருந்தே ஒழுக்க கமிட்டிகள் அமைப்பது அவசியமாகிறது. தற்போது மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன. துவக்கப்பள்ளிகளிலும் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.