அனைத்து பள்ளிகளிலும் வாசிப்பு இயக்கம் அடுத்த ஆண்டில் அமல்படுத்த திட்டம்
அனைத்து பள்ளிகளிலும் வாசிப்பு இயக்கம் அடுத்த ஆண்டில் அமல்படுத்த திட்டம்
UPDATED : டிச 27, 2023 12:00 AM
ADDED : டிச 27, 2023 10:38 AM
கோவை:
வாசிப்பு இயக்கம் அனைத்து பள்ளிகளுக்கும், அடுத்த கல்வியாண்டில் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.அரசுப்பள்ளி மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த, நடப்பாண்டு ஜூலை மாதம், வாசிப்பு இயக்கம் துவங்கப்பட்டது. பரீட்சாயித்த முறையில், 11 மாவட்டங்களில், 11 ஒன்றியங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் மட்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.கோவை, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட, 83 அரசுப்பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கு தலா 53 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.மெல்ல கற்கும் மாணவர்களையும் வாசிப்பில் ஈடுபடுத்துவதோடு, நன்றாக வாசிக்கும் மாணவர்களின் தேடலையும் பூர்த்தி செய்யும் வகையில், நுழை,நட, ஓடு, பற என நான்கு வகையாக புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. 14 கருத்தாளர்கள் சுழற்சி முறையில், ஒரு பள்ளிக்கு இரு பாடவேளைகள் வீதம் சென்று, மாணவர்களை வாசிக்க வைக்கின்றனர். இப்புத்தகங்களை மாணவர்கள் படித்து முடித்ததால், புதிய புத்தகங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிலர் கூறுகையில், வாசிப்பு இயக்கம் நடைமுறையில் உள்ள, 11 ஒன்றியங்களிலும், மாணவர்களின் ஈடுபாடு வரவேற்கத்தக்க வகையில் உள்ளது. இதனால், அடுத்த கல்வியாண்டில், அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது என்றனர்.