பள்ளி திறந்ததும் திருப்புதல் தேர்வு பொதுத்தேர்வு ஏற்பாடு தீவிரம்
பள்ளி திறந்ததும் திருப்புதல் தேர்வு பொதுத்தேர்வு ஏற்பாடு தீவிரம்
UPDATED : டிச 27, 2023 12:00 AM
ADDED : டிச 27, 2023 06:12 PM
கோவை:
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்ததும், திருப்புதல் தேர்வு நடத்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பள்ளிக்கல்வித்துறை சார்பில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. சமீபத்தில் நடந்த அரையாண்டு தேர்வுக்கு, இவ்வகுப்பு மாணவர்களுக்கு முழு பாடத்திட்டத்தில் இருந்தும் வினாக்கள் இடம்பெற்றன. விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள், வரும் 2ம் தேதி துவங்குகின்றன. பொதுத்தேர்வுக்கு முன், மூன்று முறை திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும்.இதன்படி மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, முதல் திருப்புதல் தேர்வு, வரும் 5ம் தேதி துவங்கி 12ம் தேதி நிறைவடைகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், பொங்கல் பண்டிகைக்கு முன், முதல் திருப்புதல் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, பிப்ரவரியில் செய்முறை பொதுத்தேர்வு நடத்தப்படும். இதற்கு முன்பே, திருப்புதல் தேர்வுகள் நடத்தி முடித்தால் தான், மாணவர்களால் பொதுத்தேர்வுக்கு தயாராக முடியும். இத்தேர்வுகளில் மாணவர்களின் முழு வருகைப்பதிவு உறுதி செய்ய தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.