UPDATED : டிச 29, 2023 12:00 AM
ADDED : டிச 29, 2023 10:41 AM
திருப்பூர்:
துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, ஜன., 2ல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கும் நாளில், மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க, தேவையான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.தமிழ்நாடு பாடநுால் கழகம் மூலம் திருப்பூர் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு, அவிநாசி, ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், பொங்கலுார் பகுதியில் உள்ள துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு வழங்க, 69, 049 புத்தகங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.குப்பாண்டம்பாளையம், 15 வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆங்கில மீடியத்துக்கு, 29 ஆயிரம், தமிழ் வழியில் படிப்பவருக்கு, 39 ஆயிரம் என புத்தகங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் வசம் ஒப்படைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.