சட்டக்கல்லுாரி புதிய கட்டடத்தைதிறக்க மாணவர்கள் வலியுறுத்தல்
சட்டக்கல்லுாரி புதிய கட்டடத்தைதிறக்க மாணவர்கள் வலியுறுத்தல்
UPDATED : டிச 30, 2023 12:00 AM
ADDED : டிச 30, 2023 10:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லுாரிக்குரிய புதிய கட்டடத்தை விரைவில் திறக்க வேண்டும், என மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.மாணவர்கள் கூறியதாவது:
ராமநாதபுரத்தில் 2017ல் சட்டக்கல்லுாரி துவங்கியது முதல் பெருங்குளத்தில் உள்ள பள்ளியில் செயல்படுகிறது. கல்லுாரிக்குரிய கட்டுமான பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் உள்ளது. போதுமான வகுப்பறையின்றி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளி செல்லும் வழியில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். விரைவில் புதிய கட்டடத்தை திறக்க அரசு உத்தரவிட கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும் என்றனர்.