ஆசிரியர்களின் புகார்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அதிரடி நடவடிக்கை
ஆசிரியர்களின் புகார்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அதிரடி நடவடிக்கை
UPDATED : டிச 30, 2023 12:00 AM
ADDED : டிச 30, 2023 04:51 PM
லக்னோ:
சம்பளம் தரவில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்த உடன், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உடனே, அதை வழங்கும் படி உத்தரவிட்டு, அதிரடி நடவடிக்கை எடுத்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.பா.ஜ.,வின் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதி எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி தனது சொந்த தொகுதிக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார். தொகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் மனு அளித்தனர். அப்போது ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள் பலர், நாங்கள் ஓய்வு பெற்ற போதிலும், வேலைப் பார்த்தபோது எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் இன்னும் வழங்கவில்லை. அதை பெற்றுத்தர உதவ வேண்டும் எனத் தெரிவித்தனர்.இதையடுத்து ஸ்மிருதி இரானி உடனடியாக மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டார். அவரிடம், உங்கள் முன் நிலுவையில் இருக்கும் அனைத்து கோப்புகளையும் உடனடியாக சரிபார்த்து அனுப்புங்கள் என உத்தரவிட்டார். மேலும், கொஞ்சம் மனிதாபிமானத்தை காட்டுங்கள். இது அமேதி. இங்குள்ள ஒவ்வொருவரும் என்னை அணுகலாம். யோகி ஆதித்யநாத் அரசு, சம்பளம் நிலுவையில் உள்ள ஆசிரியர்களுக்கு சம்பளத்தை உடனடியாக கிடைக்க வேண்டும் என விரும்புகிறது. அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.