தானியங்கி மருந்து வழங்கும் இயந்திரம் சித்தா மருத்துவமனையில் டாம்கால் புதிய முயற்சி
தானியங்கி மருந்து வழங்கும் இயந்திரம் சித்தா மருத்துவமனையில் டாம்கால் புதிய முயற்சி
UPDATED : டிச 31, 2023 12:00 AM
ADDED : டிச 31, 2023 11:06 AM
அரும்பாக்கம்:
அரும்பாக்கம்,அரசின் சித்தா மருவத்துவமனையில் முதல் முறையாக தனியங்கி மருந்து வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் அறிஞர் அண்ணா இந்திய மருத்துவமனை அரும்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில், சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் மற்றும் மருத்துவமனையில், முதியோர் மற்றும் குழந்தைகளுக்கும் பல்வேறு சிகிச்சைகளுக்காக புறநோயாளி பிரிவுகள் உள்ளன.அதேபோல், ஹோமியோதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரியுடன், மருத்துவமனையும் இயங்கி வருகிறது. பல்வேறு இடங்களில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் இங்கு தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதே வளாகத்தில், தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகமான, டாம்ப்கால் இயங்கி வருகிறது. இந்த மருந்து நிறுவனத்தின் மூலம் தரமான மருந்துகள், குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. டாம்காலில் கூட்ட நெரிசலை குறைக்கவும், மக்களின் வசதிக்காகவும், சித்த மருத்துவமனையில் புறநோயாளி பிரிவுக்கு நுழைவு சீட்டு பெறும் வாயலில், தானியங்கி மருந்து வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, டாம்கால் மருந்து விற்பனை நிறுவனத்தின் மேற்பார்வையாளர் சீனிவாசன் கூறியதாவது:
முதல் முறையாக, டாம்கால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உத்தரவின்படி, தானியங்கி மருந்து வழங்கும் இயந்திரம், சித்த மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் நின்று மருத்து வாங்கும் சிரமத்தை குறைக்கவும், மக்களின் வசதிக்காகவும் இயந்திரம் வைத்துள்ளோம்.தற்போது உள்ள காலக்கட்டத்தில், சித்தா, ஆயுர்வேத மருந்துகளை அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர். அவர்களே தங்களுக்கு தேவையான மருந்துகளை பணத்தை செலுத்தி, எடுத்துக் கொள்ளலாம்.மாதிரிக்காக வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தில், 10 மருத்துகள் மட்டுமே வைத்துள்ளோம். மக்களின் வரவேற்பை பொறுத்து, கூடுதல் மருந்துகளுடன் பொது இடங்களில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினர்.