தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீருக்கடியில் ஆய்வு, தேடல், மீட்பு சவாலா... சாத்தியமா...

நீருக்கடியில் ஆய்வு, தேடல், மீட்பு சவாலா... சாத்தியமா...

நீருக்கடியில் ஆய்வு, தேடல், மீட்பு சவாலா... சாத்தியமா...


UPDATED : டிச 31, 2023 12:00 AM

ADDED : டிச 31, 2023 08:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2023 12:00 AM ADDED : டிச 31, 2023 08:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளானிஸ் என்பது கடல் ரோபாட்டிக்ஸ் துறையில் சிதைவுறா சோதனை மற்றும் நுண்ணறிவு தரவு பகுப்பாய்வு செய்யும் ஒரு ஸ்டார்ட்- அப் நிறுவனமாகும். இது உருவாக்கியுள்ள தொலையியக்கி வாகனங்கள் (ஆர்.ஓ.வி.,) கடலுக்கடியில் கடல்வழி, கட்டமைப்பு மற்றும் ஆற்றல் துறைகளுக்கு தேவையான சொத்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை அளிக்கிறது.இந்நிறுவனம் ஐ.ஐ.டி., மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் துவங்கப்பட்டது. நீருக்கடியில் ஆர்.ஓ.வி.,க்கள் நீரில் கட்டப்பட்டுள்ள உள்கட்டமைப்பு (அணைகள், பாலங்கள், நீர்வழிகள் ஆகியன) எண்ணெய் மற்றும் வாயு; தேடல் மற்றும் மீட்பு; மீன் வளர்ப்பு உள்ளிட்ட பல தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆளில்லாமல், நீரில் மூழ்கக்கூடிய, மேலே, கீழே, முன்னோக்கி மற்றும் பின்னோக்கி எளிதாக செல்லக்கூடியவை. சாதனத்தில் சிறிதளவு மாற்றங்களைச் செய்வதன் மூலமும், சில பகுதிகளை மறுவடிவமைப்பதன் மூலமும் அறிவியல் ஆழ்கடல் ஆய்வுகளுக்கும் பயன்படுத்த முடியும்.நீருக்கடியில் கட்டப்பட்டுள்ள உள்கட்டமைப்புக்கு, அதன் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்கும், எதிர்பாராத கட்டமைப்பு சரிவைத் தவிர்ப்பதற்கும் அவ்வப்போது நீருக்கடியில் ஆய்வு தேவைப்படுகிறது.செயல்திறன், துல்லியம்
ஆர்.ஓ.வி.,க்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இன்றியமையாதவை. இவற்றின் செயல்திறன், துல்லியம் ஆகியவற்றை கொண்டு பாரம்பரிய முறைகளை விட ஆளில்லா ஆய்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. எண்ணெய் மற்றும் எரிவாயு துறைக்கு, வழக்கமாக காட்சி ஆய்வு, சிதைவுறா சோதனை, மீட்பு மற்றும் கட்டுப்பாடு போன்ற சேவைகளை வழங்குகிறது.சிக்கலான மற்றும் அபாயகரமான இடங்களுக்கும் இவை பயணிப்பதால் உலகம் முழுவதும் உள்ள தேடல் மற்றும் மீட்புக் குழுக்களுக்கான சரியான கருவியாக இருக்கிறது. நீரில் மூழ்கியவர்களை கண்டறிதல், தடயவியல் மதிப்பீடு, உபகரண மீட்பு, பெரிய அளவிலான தேடல் ஆகியவற்றிற்கு உதவுகிறது.ஒரு மீன் பண்ணையில் உபகரணங்கள் செயல்பாட்டு நிலையில் இருப்பதை உறுதி செய்வது, சுகாதாரம் மற்றும் சுகாதாரத் தரங்களை எப்போதும் நிலையாக வைத்திருப்பது போன்றவை சவாலாக உள்ளது. இவற்றை சரிவர செய்ய, ஆர்.ஓ.வி.,க்கள் பெரிதும் உதவுகின்றன.கடல்சார் தொழில்துறைக்கு அதாவது, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகிய துறைகளிலும் பயன்படுகின்றன. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், பல விருதுகளை தேசிய அளவிலும், உலகளவிலும் பெற்றுள்ளது.இணையதளம்:
www.planystech.com அலைபேசி எண்:
+91 98336 41091 / +91 84481 88507 இ-மெயில்:
info@planystech.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us