sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

எச் 1-பி உட்பட அனைத்து விசாக்களின் விண்ணப்ப பரிசீலனை கட்டணம் உயர்வு

/

எச் 1-பி உட்பட அனைத்து விசாக்களின் விண்ணப்ப பரிசீலனை கட்டணம் உயர்வு

எச் 1-பி உட்பட அனைத்து விசாக்களின் விண்ணப்ப பரிசீலனை கட்டணம் உயர்வு

எச் 1-பி உட்பட அனைத்து விசாக்களின் விண்ணப்ப பரிசீலனை கட்டணம் உயர்வு


UPDATED : டிச 31, 2023 12:00 AM

ADDED : டிச 31, 2023 08:16 PM

Google News

UPDATED : டிச 31, 2023 12:00 AM ADDED : டிச 31, 2023 08:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்:
எச் 1-பி உட்பட அனைத்து வகையான விசாக்கள் கோரி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான பரிசீலனை கட்டணத்தை, அமெரிக்க அரசு, 12 சதவீதம் உயர்த்தியுள்ளது.அமெரிக்காவில் பணியாற்ற செல்லும் வெளிநாட்டினருக்கு, எச் 1 பி உள்ளிட்ட விசாக்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. குறிப்பிட்ட சில விசாக்களின் விண்ணப்பங்களுக்கு, பிரீமியம் பரிசீலனை கட்டணத்தை தேர்வு செய்தால், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.உதாரணமாக, ஐ - 1765, ஐ - 1439 போன்ற விண்ணப்ப படிவங்கள் மீது முடிவெடுக்க, 30 நாட்களாகும் நிலையில், எச் 1 பி விசா விண்ணப்பத்துக்கு, பிரீமியம் பரிசீலனை கட்டணத்தை செலுத்தினால், 15 நாட்களில் முடிவெடுக்கப்படும்.இந்நிலையில், எச் 1 பி விசா உட்பட அனைத்து வகை விசாக்களின் விண்ணப்பங்களுக்கான பிரீமியம் பரிசீலனை கட்டணத்தை, 12 சதவீதம் உயர்த்தி, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை அறிவித்துள்ளது.இதன்படி, எச் 1 பி விசாவுக்கான விண்ணப்ப பிரீமியம் பரிசீலனை கட்டணம், 2.08 லட்சத்தில் இருந்து, 2.33 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், கணவன் அல்லது மனைவி மற்றும் எச் 1 பி விசா வைத்திருப்பவர்கள் தங்களுடைய புலம்பெயர்ந்தோர் அல்லாத நிலையை புதுப்பிக்க பயன்படுத்தும், ஐ - 539 படிவத்தின் பிரீமியம் பரிசீலனை கட்டணம், 1.63 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இதேபோல, மேலும் சில கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டணம், 2024 பிப்., 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.கடந்த, 2021 ஜூன் - 2023 ஜூன் வரை நிலவிய பணவீக்கம் காரணமாக, எச் 1 பி விசா உட்பட அனைத்து வகை விசாக்களின் விண்ணப்ப பரிசீலனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 






      Dinamalar
      Follow us