UPDATED : ஜன 01, 2024 12:00 AM
ADDED : ஜன 01, 2024 10:39 AM
கம்பம்:
உலக அமைதி வேண்டியும், கம்பராயப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விரைந்து நடைபெற வேண்டியும் 500 க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்ற மெகா திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.உலக அமைதி வேண்டியும், கம்பராயப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விரைந்து நடைபெற வேண்டியும், கம்பம், கம்ப ராயப்பெருமாள் கோயில் வளாகத்தில் மெகா திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. நெய்வேலி பண்ணிசை சிவனடியார் மகளிர் குழுவினர் 60 பேர்கள், பேராசிரியர் சிவகண முருகப்பன் தலைமை வகித்தார். விஜயலட்சுமி குப்புசாமி முன்னிலை வகித்தார்.இந்த முற்றோதல் நிகழ்வில் திருவாடுதுறை ஆதினம் சைவ சித்தாந்தம், பன்னிரு திருமுறை பயிற்சி மையங்கள், கம்பம், சின்னமனுார், தேனி சிவனடியார்கள், சின்னமனுார் தெய்வீகப் பேரவை, கம்பம் சிவ மடம், தேனி மாவட்ட சைவ அமைப்புக்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர்.காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை முற்றோதல் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் ராமனாதன், ராமகிருஷ்ணன், உமாமகேஸ்வரி, திலகவதி, ராஜம், பரசுராமன் ஆகியோர் செய்திருந்தனர்.