sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் செய்தி எதிரொலி: பள்ளி சுற்றுச்சுவர் கட்டுமான பணி துவக்கம்

தினமலர் செய்தி எதிரொலி: பள்ளி சுற்றுச்சுவர் கட்டுமான பணி துவக்கம்

தினமலர் செய்தி எதிரொலி: பள்ளி சுற்றுச்சுவர் கட்டுமான பணி துவக்கம்


UPDATED : ஜன 01, 2024 12:00 AM

ADDED : ஜன 01, 2024 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 01, 2024 12:00 AM ADDED : ஜன 01, 2024 10:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தேவராம்:
தேவாரம் அருகே ராமகிருஷ்ணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தினமலர் செய்தியின் எதிரொலியால் ரூ.19 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் துவங்கி உள்ளன.சின்னமனுார் ஒன்றியம், பொட்டிப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை நடத்தப்படுகிறது. 600 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு சுற்று சுவர் வசதி இல்லாததால் திறந்த வெளியாக அமைந்திருந்தது.விஷப்பூச்சிகள், கால்நடைகள் தாராளமாக உலா வந்தன. பலத்த காற்று வீசும் போது பறந்து வரும் மண் தூசியாலும், மழை காலங்களில் மழைநீர் பள்ளிக்குள் வந்ததாலும் மாணவர்கள் சிரமப்படுவது தொடர்ந்தது. பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்து பள்ளி நுழைவு வாயில் முன் இருந்த கட்டடத்தின் மீது கிடந்தது.மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கான வகுப்பறை, ஆய்வு கூட கட்டடம் பராமரிப்பு இன்றி சேதம் அடைந்திருந்தன. இதனால் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்பட்டனர். இரவு நேரங்களில் மது அருந்தும் பாராகவும், சமூக விரோத செயல்கள் நடக்கும் பகுதியாக பள்ளி மாறியது.இதனால் சுற்றுச்சுவர், வகுப்பறை கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என கல்வித் துறை உயர் அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.மாணவர்கள், ஆசிரியர்களின் நலன் கருதி பள்ளி வகுப்பறை கட்டடத்தை சீரமைப்பதோடு, சுற்று சுவர் வசதி அமைத்து தர வேண்டும் என தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.அதன் எதிரொலியாக பொட்டிபுரம் ஊராட்சி மூலம் என்.ஆர்.ஜி.எஸ்., திட்டத்தில் ரூ.19 லட்சம் செலவில் சாய்ந்து கிடந்த மரங்களை அகற்றியதோடு, சுற்றுச்சுவர் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் நடந்து வருவதால், மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us