பள்ளி பசுமைப்படை அமைப்புகளுக்கு நிறுத்தப்பட்ட நிதி மீண்டும் வழங்கப்படுமா
பள்ளி பசுமைப்படை அமைப்புகளுக்கு நிறுத்தப்பட்ட நிதி மீண்டும் வழங்கப்படுமா
UPDATED : ஜன 01, 2024 12:00 AM
ADDED : ஜன 01, 2024 10:50 AM
தேனி:
மாவட்டத்தில் மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் கீழ் பள்ளிகளில் இயங்கிவரும் பசுமைப்படை அமைப்பு செயல்பாட்டிற்காக வழங்கப்பட்ட நிதி மூன்றாண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் நிதி வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டு பசுமைப்படை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வமைப்பை ஒரு ஆசிரியர் வழி நடத்துவார். உறுப்பினர்களாக உள்ள மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுவதன் அவசியம், பள்ளிகளில் மூலிகை தாவரங்கள் வளர்த்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.இந்த அமைப்பிற்கு ஆண்டு தோறும் தலா 5 ஆயிரம் மரக்கன்றுகள் வாங்கவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் 2020க்குப் பின் இந்த நிதி நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளியில் பசுமைப்படை அமைப்பாளர்கள் செலவுகளை செய்து வருகின்றனர். நடப்பாண்டில் இருந்தாவது மாசுகட்டுப்பாட்டு வாரியம் பள்ளிகளில் உள்ள பசுமைப்படை அமைப்பிற்கு நிதி வழங்கும் வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.