கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு
கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு
UPDATED : ஜன 01, 2024 12:00 AM
ADDED : ஜன 01, 2024 10:57 AM
பெருந்துறை:
பெங்களூரு நம்ம நிம்மா சைக்கிள் அறக்கட்டளையுடன் இணைந்து, ஏ.ஐ.சி.டி.ஈ., ஏற்பாடு செய்த தேசிய அளவிலான சைக்கிள் வடிவமைப்பு மற்றும் முன்மாதிரி கட்டுமான போட்டி, பெங்களூரு சாணக்யா பல்கலைக்கழகத்தில் நடந்தது.இதில் இந்தியா முழுவதும் இருந்து, 16 அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகின.இதில் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையின் இரண்டு அணிகள் முறையே, சரக்கு எலக்ட்ரிகல் வெஹிக்கிள் மற்றும் சரக்கு அல்லாத எலக்ட்ரிகல் வெஹிக்கிள் பிரிவில் தேர்வு செய்யப்பட்டன.சரக்கு அல்லாத வாகனம் பிரிவில் முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வென்றது. உதவி பேராசிரியர் சதீஷ்குமார் வழிகாட்டியாக இருந்தார்.பரிசு பெற்ற மாணவர்கள் குணாளன், நவமணி சக்தி, அவின் ஜினு, ஜெக்ஷன் ஆகியோரை, கல்லுாரி தாளாளர் இளங்கோ, கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டிரஸ்ட் பாரம்பரிய உறுப்பினர் சச்சிதானந்தன், கல்லுாரி முதல்வர் பாலுசாமி, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறைத்தலைவர் செல்வகுமார் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.