ஆதித்யா விண்கலம் - ஜன.,6ல் எல்-1 புள்ளியை அடையும்!
ஆதித்யா விண்கலம் - ஜன.,6ல் எல்-1 புள்ளியை அடையும்!
UPDATED : ஜன 01, 2024 12:00 AM
ADDED : ஜன 01, 2024 04:59 PM
பெங்களூரு:
ஆதித்யா விண்கலம் ஜன.,6ம் தேதி மாலை 4 - 4.30 மணிக்கு எல்-1 புள்ளியை அடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.சூரியனை ஆய்வு செய்ய, கடந்த செப்., 2ல், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் ஏவியது. இது, பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., துாரம், 125 நாட்கள் பயணித்து, சூரியனுக்கு அருகில் உள்ள, எல் 1 எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்தப்பட உள்ளது.சமீபத்தில் ஆதித்யா எல் 1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள, சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் வாயிலாக எடுக்கப்பட்ட சூரியனின் புகைப்படங்களை, இஸ்ரோ வெளியிட்டு இருந்தது.இந்நிலையில் சோம்நாத் கூறியிருப்பதாவது:
ஆதித்யா எல்-1 அதன் இறுதி கட்டத்தின் துவக்க புள்ளியில் இருக்கிறது. ஆதித்யா விண்கலம் ஜன.,6ம் தேதி மாலை 4- 4.30 மணிக்கு எல்-1 புள்ளியை அடையும்.இவ்வாறு அவர் கூறினார்.