UPDATED : ஜன 02, 2024 12:00 AM
ADDED : ஜன 02, 2024 10:39 AM
நாடு முழுதும் மத்திய உயர் கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்களுக்கான இட ஒதுக்கீடு விதிகள், கடந்த 2006ம் ஆண்டு சட்டத்தின்படி பின்பற்றப்படுகின்றன.இவற்றில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாகவும், அவற்றை களைய வேண்டும் என்றும், மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வந்ததாக, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.இதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு விதிகளை மாற்றியமைக்க, நிபுணர் குழு அமைக்கப்பட்டு, புதிய வழிகாட்டு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது கல்வியாளர்கள், பொது மக்கள், துறை நிபுணர்கள் உள்ளிட்டோர், தங்கள் கருத்துகளை, வரும் 28ம் தேதிக்குள், uamp.ugc.ac.in என்ற இணைதயள பக்கத்தில் பதிவு செய்யலாம் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.கூடுதல் விபரங்களை, www.ugc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.