UPDATED : ஜன 02, 2024 12:00 AM
ADDED : ஜன 02, 2024 11:38 AM
அனுப்பர்பாளையம்:
அரசு பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான மரங்கள் வெட்டப்பட்டது குறித்து அப்பகுதியினர் மாநகராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தனர்.அனுப்பர்பாளையம்புதுாரில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில், 35 ஆண்டுகளுக்கு மேலான வேம்பு மற்றும் 10 ஆண்டு வாகை ஆகிய இரண்டு மரங்கள் இருந்தன. இவ்விரு மரங்களும் நேற்று முன் தினம் அடியோடு வெட்டி அகற்றி அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது. மரத்தின் வேரால் கட்டடம் மற்றும் குடிநீர் தொட்டி பாதிக்கப்படுகிறது என பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகத்தை சேர்ந்த சிலர் மரத்தை வெட்ட நடவடிக்கை எடுத்தனர்.மரம் வெட்டுவதற்கான கூலிக்கு மரத்தை வெட்டியவரிடம் அந்த மரத்தை எடுத்து செல்ல அனுமதித்துள்ளனர். மரம் பள்ளி மாணவர்களுக்கு நிழலாக இருந்து வந்தது. அனுமதியின்றி மரம் வெட்டியது குறித்து, அப்பகுதி பொதுமக்கள், மாநகராட்சியில் புகார் தெரிவித்து உள்ளனர்.