கல்வித்துறையின் பூங்காவாக திகழும் தமிழகம்: ஸ்டாலின் பெருமிதம்
கல்வித்துறையின் பூங்காவாக திகழும் தமிழகம்: ஸ்டாலின் பெருமிதம்
UPDATED : ஜன 02, 2024 12:00 AM
ADDED : ஜன 02, 2024 05:21 PM
திருச்சி:
கல்வித்துறையின் பூங்காவாக தமிழகமும், அதன் கல்வி நிறுவனங்களும் திகழ்கிறது என திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மேலும், அவர் பேசியதாவது:
பிரதமர் மோடிக்கு புத்தாண்டு வாழ்த்துகள். தமிழக மக்கள் சார்பாக உங்களை வரவேற்கிறேன். திராவிட கொள்கையை தமிழ் நிலத்தில் முழங்கிய பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம். இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம். கல்வித்துறையின் பூங்காவாக தமிழகமும், அதன் கல்வி நிறுவனங்களும் திகழ்கிறது.அனைவருக்கும் கல்வி என்பதே இந்த திராவிட மாடல் அரசின் கொள்கை. அனைவருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அரசு ஏற்படுத்தி தருகிறது. இன்னார்தான் படிக்க வேண்டும் என்பதை மாற்றி அனைவரையும் படிக்க வைக்கும் ஆட்சி நடைபெறுகிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நீதிக்கட்சி ஆட்சியின் திட்டம்தான் தமிழகத்தை உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றியுள்ளது.திறனை மேம்படுத்தி 1.40 லட்சம் பேருக்கு ஓராண்டில் வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது. 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கல்வித்துறையில் சமூக நீதி புரட்சியை திராவிட மாடல் அரசு நிகழ்த்தி வருகிறது. பல்கலைக்கழகங்கள் சமூகநீதியையும், புதுமைகளையும் புகுத்தும் இடமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.