UPDATED : ஜன 03, 2024 12:00 AM
ADDED : ஜன 04, 2024 09:15 AM
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, 1,112 கோடி ரூபாயில் கட்டப்பட்ட திருச்சி விமான நிலைய புதிய முனையம், திருச்சி என்.ஐ.டி.,யில் புதிதாக கட்டப்பட்டுள்ள கல்வி உட்கட்டமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும், அமிதிஸ்ட் விடுதியை திறந்து வைத்தார்.திருச்சி, என்.ஐ.டி., யில் 2019 - 20ம் கல்வி யாண்டில், மாணவர் சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, 10 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனால், மாணவர் சேர்க்கை அதிகரித்தது.அந்த மாணவர்கள் தங்குவதற்காக, வைபை, புரஜக்டர் போன்ற நவீன வசதிகளுடன், மத்திய அரசு நிதி, 41 கோடி ரூபாயில், 1.20 லட்சம் சதுர அடியில், நான்கு மாடிகளுடன், 506 மாணவர்கள் தங்கும் வகையில், 253 அறைகளுடன், அமிதிஸ்ட் விடுதி கட்டப்பட்டது.