sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளி, கல்லுாரி மாணவருக்கு கவிதை, கட்டுரை போட்டிகள்

/

பள்ளி, கல்லுாரி மாணவருக்கு கவிதை, கட்டுரை போட்டிகள்

பள்ளி, கல்லுாரி மாணவருக்கு கவிதை, கட்டுரை போட்டிகள்

பள்ளி, கல்லுாரி மாணவருக்கு கவிதை, கட்டுரை போட்டிகள்


UPDATED : ஜன 04, 2024 12:00 AM

ADDED : ஜன 04, 2024 10:03 AM

Google News

UPDATED : ஜன 04, 2024 12:00 AM ADDED : ஜன 04, 2024 10:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களிடையே தமிழில் படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் வகையில், ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இம்மாதம் 9ம் தேதி, 2023- 24ம் ஆண்டுக்கான போட்டிகள், காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், காலை 9:00 மணிக்கு நடைபெற உள்ளது. கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள், 10ம் தேதி நடைபெற உள்ளன.போட்டி நடைபெறும் நாளில், மாணவர்கள் தங்கள் வருகையை பதிவு செய்யலாம். இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவ - மாணவியர் தலைமையாசிரியரிடமும், கல்லுாரி மாணவர்கள் கல்லுாரி முதல்வரிடமும் பரிந்துரை கடிதம் பெற்று, போட்டியில் பங்கேற்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us