sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பெரும்பாக்கம் ஐ.டி.ஐ., புது கட்டடம் இம்மாதம் இறுதியில் திறக்க முடிவு

/

பெரும்பாக்கம் ஐ.டி.ஐ., புது கட்டடம் இம்மாதம் இறுதியில் திறக்க முடிவு

பெரும்பாக்கம் ஐ.டி.ஐ., புது கட்டடம் இம்மாதம் இறுதியில் திறக்க முடிவு

பெரும்பாக்கம் ஐ.டி.ஐ., புது கட்டடம் இம்மாதம் இறுதியில் திறக்க முடிவு


UPDATED : ஜன 04, 2024 12:00 AM

ADDED : ஜன 04, 2024 10:06 AM

Google News

UPDATED : ஜன 04, 2024 12:00 AM ADDED : ஜன 04, 2024 10:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரும்பாக்கம்:
சென்னை பெரும்பாக்கம், அரசு தொழிற் பயிற்சி நிலையம், 2019ல் துவக்கப்பட்டது. இங்கு, வெல்டிங், ஏசி மெக்கானிக், எலக்ட்ரீசியன், கணினி மற்றும் இருசக்கர வாகனம் பழுது நீக்கம் போன்ற பாடப்பிரிவுகள் உள்ளன.தற்போது, அங்குள்ள ஒரு சமூக நலக்கூடத்தில், தொழிற் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. சொந்த கட்டடம் கட்ட, 4.50 ஏக்கர் இடம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஒதுக்கியது.இந்த இடத்தில், பவர் கிரீட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனம் சார்பில், சி.எஸ்.ஆர்., நிதி 10 கோடி ரூபாயில், 27,000 சதுர அடி பரப்பில் கட்டடம் கட்டப்படுகிறது.இதில், ஆறு வகுப்பறைகள், ஐந்து தொழில் பயிலும் மையம், அலுவலகம், ஆவண காப்பகம், பொருட்கள் பாதுகாப்பு அறை, ஆய்வகம், கூட்ட அரங்கு, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் அமைந்துள்ளன.தற்போது, 98 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. இம்மாத இறுதிக்குள், புதிய கட்டடத்தை திறக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் அருகில், தமிழக அரசு சார்பில், 3.70 கோடி ரூபாயில், உயர் தொழில்நுட்ப மையம் கட்டப்பட்டுள்ளது.இதில், டாடா நிறுவனம், 30 கோடி ரூபாயில், ரோபோ உள்ளிட்ட உயர் தொழில்நுட்பட உபகரணங்கள் வழங்கி உள்ளன. இந்த கல்வி ஆண்டு முதல், உயர்தொழில்நுட்ப பாடப்பிரிவு துவங்கப்பட்டது. புதிய கட்டடம் திறந்தால், ஒரே வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் ஐ.டி.ஐ., செயல்படும் என, அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us