UPDATED : ஜன 05, 2024 12:00 AM
ADDED : ஜன 05, 2024 02:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெர்ரி:
மத்திய மேற்கு அமெரிக்காவின் லோவா மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். 5 மாணவர்கள் காயமுற்றனர். இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்த காரணம் ஏதும் வெளியாகவில்லை. மர்மநபர்களை பிடிக்க போலீஸ் சிறப்பு படை விசாரணை நடத்தி வருகிறது.அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாசாரம் சமீபத்தில் அதிகரித்து வருவதாக ஒரு புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 656 துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.