sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நெதர்லாந்து உதவித்தொகை

/

நெதர்லாந்து உதவித்தொகை

நெதர்லாந்து உதவித்தொகை

நெதர்லாந்து உதவித்தொகை


UPDATED : ஜன 05, 2024 12:00 AM

ADDED : ஜன 08, 2024 09:08 AM

Google News

UPDATED : ஜன 05, 2024 12:00 AM ADDED : ஜன 08, 2024 09:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்த உதவித்தொகை திட்டத்திற்கு, டச்சு கல்வி, கலாசாரம், அறிவியல் அமைச்சகம் மற்றும் பல டச்சு ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகங்களால் நிதியளிக்கப்படுகிறது.உதவித்தொகை விபரம்:
முதலாம் ஆண்டு படிப்பில் 5 ஆயிரம் யூரோக்கள் வழங்கப்படுகிறது. நெதர்லாந்து கல்வி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக்கட்டணத்திற்கு முழுமையாக உதவித்தொகை வழங்கப்படுவதில்லை.தகுதிகள்:
* ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை இல்லாதவராக இருக்க வேண்டும்.* டச்சு உயர்கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் முழுநேர இளநிலை அல்லது முதுநிலை படிப்பிற்கு விண்ணப்பித்து இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கான தகுதி விபரங்களுக்கு, அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கலாம். * நெதர்லாந்தில் உள்ள எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பட்டம் பெறாதவராக இருத்தல் அவசியம்.உதவித்தொகை பெற தகுதியான ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள்:
லைடன் பல்கலைக்கழகம்உட்ரெக்ட் பல்கலைக்கழகம்க்ரோனிங்கன் பல்கலைக்கழகம்எராஸ்மஸ் பல்கலைக்கழகம் ரோட்டர்டாம்மாஸ்ட்ரிக்ட் பல்கலைக்கழகம்வி.யு., ஆம்ஸ்டர்டாம்ராட்பவுட் பல்கலைக்கழகம்டில்பர்க் பல்கலைக்கழகம்டெல்ப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்ஐந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்ட்வென்டே பல்கலைக்கழகம்வாகனிங்கன் பல்கலைக்கழகம்தியாலஜிக்கல் பல்கலைக்கழகம் - அப்பல்டோர்ன்தியாலஜிக்கல் பல்கலைக்கழகம் - கம்பன்விண்ணப்பிக்க கடைசி நாள்:
பல்கலைக்கழகத்திற்கு ஏற்ப விண்ணப்ப தேதி மாறுபடும்.விபரங்களுக்கு:
https://www.studyinnl.org/finances/nl-scholarship






      Dinamalar
      Follow us