வாட்டுது கடும் குளிர்: டில்லியில் ஜன.,10 வரை பள்ளிகள் மூடல்
வாட்டுது கடும் குளிர்: டில்லியில் ஜன.,10 வரை பள்ளிகள் மூடல்
UPDATED : ஜன 08, 2024 12:00 AM
ADDED : ஜன 08, 2024 09:36 AM
புதுடில்லி:
டில்லியில் கடும் குளிர் காரணமாக, பள்ளிகளுக்கு ஜன.,10 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.வட மாநிலங்களான பஞ்சாப், சண்டிகர், ராஜஸ்தான், அரியானா, டில்லியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக டில்லியில் கடுமையான பனி கொட்டுகிறது. இதனால் காலை நேரத்தில் மக்கள் பாடுபட்டு வருகின்றனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மக்கள் காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.இதற்கிடையே, டில்லியில் குளிர்கால விடுமுறை முடிந்து, நாளை(ஜன.,08) பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. கடுமையான குளிர் காலநிலை காரணமாக, டில்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வரும் ஜன.,10ம் தேதி வரை குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.டில்லியில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கடுமையான குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.