sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கனமழை: 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை: 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை: 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


UPDATED : ஜன 08, 2024 12:00 AM

ADDED : ஜன 08, 2024 09:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2024 12:00 AM ADDED : ஜன 08, 2024 09:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
கனமழை காரணமாக, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று(ஜன.,8) விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.* கனமழை காரணமாக, திருவண்ணாமலை, வேலூர், அரியலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.* நாகையில், நாகபட்டினம், கீழ்வேளூர் தாலுகாக்களை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம், திருக்குவளை தாலுகாகளில், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.* புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும், காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது.* அதிகபட்சமாக சீர்காழியில் 22 செ.மீ, திருவாரூரில் 21.2 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலின் தென் மேற்கு பகுதியிலும், தென் கிழக்கு பகுதியிலும், வளிமண்டல கீழடுக்கில் தலா ஒரு சுழற்சி நிலவுகிறது. இதனால், வங்கக்கடலின் தென் மேற்கு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்று முதல், 10ம் தேதி வரை மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். வரும், 11ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும். சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us