UPDATED : ஜன 08, 2024 12:00 AM
ADDED : ஜன 08, 2024 10:01 AM
மதுரை:
மதுரையில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாவட்ட பொதுக் குழுக் கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு மாநில பொருளாளர் அனந்தராமன் தலைமையில் நடந்தது.மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தி ஜன.27 ல் சென்னையில் கோட்டையை நோக்கி நடக்கும் ஊர்வலத்தில் மதுரை நிர்வாகிகள் பங்கேற்பது, தேங்கிக் கிடக்கும் தனியார் பள்ளிகளின் கோப்புகள் மீது உடன் நடவடிக்கை எடுக்க சி.இ.ஓ.,வை சந்திப்பது, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு உடனே பணப் பலன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.புதிய நிர்வாகிகள்
கூட்டத்தில் புதிய மாவட்ட தலைவராக சாம்பிரசாத் ராஜா, செயலாளராக ராஜா, அமைப்பு செயலாளராக வெள்ளைப்பாண்டி, சட்டச் செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளராக வாசிமலை தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் சின்னப்பாண்டி, குமரேசன், கார்மேகம், கந்தசாமி, மோகன், பரமசிவம் பங்கேற்றனர்.