UPDATED : ஜன 08, 2024 12:00 AM
ADDED : ஜன 08, 2024 10:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., கல்லுாரியில் ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணிக்கான எழுத்துத்தேர்வு நடந்தது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) மூலம் 369 இன்ஜினியரிங் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இத்தேர்வினை எழுத தமிழகம் முழுதும் 59 ஆயிரத்து 630 பேர் விண்ணப்பித்திருந்தனர்.தமிழகத்தில் 202 தேர்வு மையங்களில் எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஏ.கே.டி., பாலிடெக்னிக் மற்றும் இன்ஜினியரிங் கல்லுாரியில் 725 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்திருந்த நிலையில், 426 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 299 பேர் தேர்வுக்கு வரவில்லை.