sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஓவிய திருவிழா: தமிழர் ஓவியங்களை பார்த்து பார்வையாளர்கள் பிரமிப்பு

/

ஓவிய திருவிழா: தமிழர் ஓவியங்களை பார்த்து பார்வையாளர்கள் பிரமிப்பு

ஓவிய திருவிழா: தமிழர் ஓவியங்களை பார்த்து பார்வையாளர்கள் பிரமிப்பு

ஓவிய திருவிழா: தமிழர் ஓவியங்களை பார்த்து பார்வையாளர்கள் பிரமிப்பு


UPDATED : ஜன 09, 2024 12:00 AM

ADDED : ஜன 09, 2024 10:38 AM

Google News

UPDATED : ஜன 09, 2024 12:00 AM ADDED : ஜன 09, 2024 10:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:
பெங்களூரு ஓவிய திருவிழாவில், தமிழக ஓவியர்கள் வரைந்த ஓவியங்களை பார்த்து, பார்வையாளர்கள் பிரமித்தனர்.பெங்களூரு சித்ரகலா பரிஷத் சார்பில் ஆண்டுதோறும், ஓவிய திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 21ம் ஆண்டு ஓவிய திருவிழா, பெங்களூரு குமாரகிருபா சாலையில் நேற்று துவங்கியது. முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.இதில், மக்கள் கூட்டம் அலைமோதியது. குமாரகிருபா சாலையில் உள்ள சிவானந்தா சதுக்கம் முதல், முதல்வர் சித்தராமையாவின் அரசு இல்லமான கிருஷ்ணா வரை, 1 கி.மீ.,க்கு சாலையின் இருபக்கமும் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஓவியர்கள் தாங்கள் வரைந்திருந்த, ஓவியங்களை விற்பனைக்காக வைத்து இருந்தனர்.குறிப்பாக, இளம் தலைமுறையினர் ஓவியங்களை பார்த்து மெய்சிலிர்த்ததுடன், எப்படி ஓவியங்கள் வரைய வேண்டும் என்று, ஓவியர்களிடம் கேட்டறிந்தனர். ஏராளமானோர் பணம் கொடுத்து, தங்களுக்கு பிடித்த ஓவியங்களை வாங்கி சென்றனர்.எங்கு பார்த்தாலும் ஒரே மக்கள் தலைகளாக தெரிந்தன. சில இடங்களில் ஓவியர்கள் தங்கள் எதிரே அமர்ந்திருப்பவர்களை வரைந்து கொடுத்து அசத்தினர். தமிழகத்தில் இருந்து வந்திருந்த ஓவியர்கள், தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியத்தை எடுத்து சொல்லும் வகையிலான, ஓவியங்களை வரைந்து பார்வைக்கு வைத்திருந்தனர்.அதை பார்வையாளர்கள் பார்த்து மெய்சிலிர்த்தனர். அந்த ஓவியங்கள் முன்பு நின்று, மொபைல் போன்களிலும், ஓவியங்களை வரைந்த ஓவியர்களுடன் இணைந்தும், உற்சாகமாக &'செல்பி&' எடுத்து மகிழ்ந்தனர்.இந்த ஓவிய திருவிழா இரவு 7:00 மணி வரை நடந்தது. இந்த ஓவிய திருவிழா சந்திரயான் - 3ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.தமிழக அரசு நடவடிக்கை
மாரியப்பன், ஓவியர்:
எனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் சடையபுரம். 18 ஆண்டுகளாக, ஓவிய திருவிழாவில் பங்கேற்கிறேன். இம்முறை குழந்தைக்கு, தாய் சாப்பாடு ஊட்டுவது போன்றும், இளம்பெண் மகிழ்ச்சியாக இருப்பது போன்றும், ஓவியங்களை வரைந்து, பார்வைக்கு வைத்து உள்ளேன். இரண்டு ஓவியங்கள் விலையும் தலா 2.50 லட்சம் ரூபாய் ஆகும். இரு ஓவியங்களையும் வரைய 14 மாதங்கள் ஆனது. சென்னையிலும் இதுபோன்று பெரிய அளவில் ஓவிய திருவிழா நடத்த, தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளழகர் ஆற்றில் இறங்கும்...
சக்திவேல், ஓவியர்:
என் ஊர் கோவை. பீளமேடுவில் வசிக்கிறேன். 40 ஆண்டுகளாக ஓவியங்கள் வரைகிறேன். ஓவிய திருவிழாவில் ஒன்பதாவது ஆண்டாக பங்கேற்று உள்ளேன். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும், ஓவியத்தை வரைந்து உள்ளேன். இந்த ஓவியம் 8 க்கு 6 அடி உயரம் கொண்டது. மதுரை என்றாலே ஆன்மிக நகரம் என்று அனைவருக்கும் தெரியும். ஆன்மிகத்தை வெளிப்படுத்தும் வகையில், ஓவியம் வரைந்து இருக்கிறேன். இங்கு நடக்கும் ஓவிய திருவிழாவுக்கு, எப்போதும் மக்கள் ஆதரவு உள்ளது. இது தான் எங்களை போன்ற ஓவியர்களை ஊக்குவிக்கிறது. நான் வரைந்த ஓவியத்திற்கு 12 லட்சம் ரூபாய் விலை நிர்ணயித்து உள்ளேன். விற்பனை ஆகிவிடும் என்று நம்பிக்கை உள்ளது.7 மாதங்களாக வரைந்தேன்
கோகுலம் விஜய், ஓவியர்:
தமிழகத்தின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில், விவசாயி நெற்கதிருடன் இருக்கும் ஓவியத்தையும், தெருவில் பூ வாங்குவது போன்றும் ஓவியம் வரைந்து உள்ளேன். இரு ஓவியங்களையும் வரைய, ஏழு மாதங்கள் ஆனது. ஒரு ஓவியத்திற்கு 3 லட்சம் ரூபாயும், இன்னொரு ஓவியத்திற்கு 2 லட்சம் ரூபாயும் நிர்ணயித்து உள்ளேன்.கடந்த காலங்களில் 8 லட்சம் ரூபாய் வரை, ஓவியங்கள் விற்று இருக்கிறேன். தமிழகத்திலும் அவ்வப்போது ஓவிய திருவிழா நடத்தினர். கொரோனாவுக்கு பின்னர் நிறுத்தி விட்டனர். மீண்டும் தமிழகத்தில் ஓவிய திருவிழாக்கள் நடக்க வேண்டும். அப்போது தான் திறமையான ஓவியர்களை வெளிகொண்டு வர முடியும்.






      Dinamalar
      Follow us