sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?


UPDATED : ஜன 11, 2024 12:00 AM

ADDED : ஜன 11, 2024 04:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2024 12:00 AM ADDED : ஜன 11, 2024 04:53 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகள் இடம்பிடித்துள்ளன.சர்வதேச வான் போக்குவரத்து சங்கம் அளித்த தகவலின்படி, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறித்த பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் தயாரித்துள்ளது.இதில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் பாஸ்போர்ட் முதலிடம் பிடித்துள்ளது. இதனை பயன்படுத்தி 194 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகள் முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.இந்த ஆண்டு பட்டியலில் ஐரோப்பிய நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன. பின்லாந்து, சுவீடன் மற்றும் தென் கொரியா நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகள் 3வது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.இந்த பட்டியலில் இந்தியா 80வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலம் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். இந்தியாவுடன் 62வது இடத்தை மலேஷியா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன.நமது அண்டை நாடான பாகிஸ்தான் இந்த பட்டியலில் 101வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தில் ஆப்கன் உள்ளது. இதன் பாஸ்போர்ட் மூலம் 29 நாடுகளுக்கும், சிரியா பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 29 நாடுகளுக்கும், ஈராக் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 31 நாடுகளுக்கும், பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை 34 நாடுகளுக்கும் விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us