sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி நிறுவனங்கள் இனி 2 ஆண்டு பி.எட் படிப்பை தொடர அனுமதி இல்லை

கல்வி நிறுவனங்கள் இனி 2 ஆண்டு பி.எட் படிப்பை தொடர அனுமதி இல்லை

கல்வி நிறுவனங்கள் இனி 2 ஆண்டு பி.எட் படிப்பை தொடர அனுமதி இல்லை


UPDATED : ஜன 11, 2024 12:00 AM

ADDED : ஜன 11, 2024 04:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2024 12:00 AM ADDED : ஜன 11, 2024 04:57 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
அடுத்த கல்வி ஆண்டு (2024-25) முதல் 2 ஆண்டு பி.எட் படிப்புக்கு புதிய அனுமதிகளை கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டாம் என்றும், 4 ஆண்டு பி.எட் திட்டத்தை நடத்த விரும்பும் கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இளநிலைப் பட்டப் படிப்புக்கு 3 ஆண்டுகள், பி.எட். படிப்புக்கு 2 ஆண்டுகள் என 5 ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு மாற்றாக புதிய கல்விக் கொள்கையின் கீழ் 4 ஆண்டுகளில் இளநிலைப் பட்டப் படிப்பு, பி.எட். படிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தை (ஐடிஇபி) மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்த படிப்பில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் தேசிய பொது நுழைவு தேர்வை எழுத வேண்டும்.அதேநேரத்தில் இன்னும் சில கல்வி நிறுவனங்கள் 2 ஆண்டு பி.எட் படிப்பை தொடர்ந்து வந்தன. இந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டு (2024-25) முதல் 2 ஆண்டு பி.எட் படிப்புக்கு புதிய அனுமதிகளை கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டாம் என்றும், 4 ஆண்டு பி.எட் திட்டத்தை நடத்த விரும்பும் கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் இந்திய மறுவாழ்வு கவுன்சில் (ஆர்.சி.ஐ) அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us