உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான தேர்வு 21ல் நடைபெறுகிறது
உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான தேர்வு 21ல் நடைபெறுகிறது
UPDATED : ஜன 12, 2024 12:00 AM
ADDED : ஜன 12, 2024 10:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணியில் அடங்கிய விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான கணினி வழித் தேர்வு வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பதவிக்கான கணினி வழித் தேர்வு வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.