UPDATED : ஜன 12, 2024 12:00 AM
ADDED : ஜன 12, 2024 12:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பங்கார்பேட்டை:
பங்கார்பேட்டை பஸ் நிலையத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பஸ் வசதி கேட்டு, திடீர் போராட்டம் நடத்தினர்.பங்கார்பேட்டை, தங்கவயல் இடையே மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று வர போதிய பஸ் வசதி இல்லாமல், கடந்த மூன்று மாதங்களாக அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, தினமும் காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரையில் பஸ் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும். எக்ஸ்பிரஸ் பஸ்களிலும் மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீர் போராட்டம் நடத்தினர். ஒரு மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது.மாவட்ட போக்குவரத்துத் துறை அதிகாரி சாந்தகுமார், மாணவர்களை சந்தித்து, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். அதன்பின், போராட்டம் கைவிடப்பட்டது.