UPDATED : ஜன 13, 2024 12:00 AM
ADDED : ஜன 13, 2024 10:05 AM
சென்னை:
சென்னை தீவுத்திடலில் நேற்று முதல் 48வது சுற்றுலா பொருட்காட்சி துவங்கி உள்ளது.தமிழக அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி, நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி, தீவுத்திடலில் நேற்று துவக்கி வைத்தார். 70 நாட்கள் நடக்கும் இப்பொருட்காட்சியில், அரசுத் துறை அரங்குகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை அரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் என நுாற்றுக்கணக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.விழாவை துவக்கி வைத்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
நான் பள்ளியில் பயிலும் போது பல முறை குடும்பத்துடன், இது போன்ற சுற்றுலா பெருட்காட்சியை சுற்றிபாரத்து விட்டு செல்வது வழக்கம். அதே பொருட்காட்சியை திறந்து வைப்பது எனக்கு பெருமை. இதில் கூடுதல் மகிழ்ச்சி நான் பொருப்பு வகிக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறையின் அரங்கமும் இந்த பொருட்காட்சியில் அமைக்கப்பட்டு உள்ளது. அரசின் அனைத்து துறையின் சிறப்பான திட்டங்கள் குறித்து இந்த அரங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.இரண்டு வருடத்திற்கு முன்பு இந்த பொருட்காட்சியை திறக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்னால் வர முடியவில்லை. அடுத்த 70 நாட்கள் நடக்கும் இந்த பொருட்காட்சியில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு வெற்றி அடைய செய்ய வேண்டும்இவ்வாறு அவர் பேசினார்.